குறையொன்றுமில்லை குபேரா! குபேர மந்திரம் 108 முறை ஜபித்தால் செல்வ வளம் சேரும்!
108 குபேரர் போற்றி : கோடீஸ்வர வாழ்வு தரும் மந்திரம்

குபேரர் மகிமை :

மகாலட்சுமியின் அருளைப் பெற்று, செல்வத்திற்கு அதிபதியானவர் குபேரர். திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வத்திற்குரிய அதிதேவதையாக விளங்குகிறார் குபேரர். செல்வ வளம் பெருகுவதற்கும், மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் உகந்த நாட்களான அட்சய திருதியை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் குபேரை அல்லது லட்சுமியுடன் இருக்கும் லட்சுமி குபேரரை வழிபட்டால் வாழ்வில் என்றும் குறையாத செல்வத்தை பெற முடியும்.

குபேரரை வழிபடும் முறை :

லட்சுமி குபேர பூஜை! லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி? நல்லதொரு மேடை அமைத்து, அதில் ஆசனம் போட வேண்டும். அதன் மேல் பட்டுத் துணி விரித்து. நுனி வாழை இலை வைத்து, அரிசி பரப்பி கலசம் வைக்க வேண்டும். வெள்ளி அல்லது தங்கக் காசை கலசத்தினுள் போட்டு, சுத்த ஜலம் விட்டு முறைப்படி பூஜிக்க வேண்டும் அல்லது லட்சுமி குபேர எந்திரம் வைத்து பூஜிக்கலாம். வருடா வருடம் தொடர்ந்து லட்சுமி குபேரனை பூஜிப்பதால் செல்வம் சேரும். முதலில், விநாயகர் பூஜை செய்துவிட்டு, அதன் பின் நவகிரகங்களை ஆராதனை செய்ய வேண்டும். அதன் பின், லட்சுமியை பூஜித்து, குபேரனையும் பூஜிக்க வேண்டும். வாசனைப் பூக்களால் அர்ச்சித்து, பலவித பட்சணங்களை நைவேத்தியம் செய்யலாம்.

குறையொன்றுமில்லை குபேரா...

குபேரர் போற்றி : 1 - 36 Nos.

ஓம் அளகாபுரி அரசே போற்றி
ஓம் ஆனந்தம் தரும் அருளே போற்றி
ஓம் இன்ப வளம் அளிப்பாய் போற்றி
ஓம் ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
ஓம் உகந்தளிக்கும் உண்மையே போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பவனே போற்றி
ஓம் எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஓம் ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஓம் ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
ஓம் ஓங்கார பக்தனே போற்றி
ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
ஓம் கனக ராஜனே போற்றி
ஓம் கனக ரத்தினமே போற்றி
ஓம் காசு மாலை அணிந்தவளே போற்றி
ஓம் கின்னரர்கள் தலைவனே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் கீரிப்பிள்ளை பிரியனே போற்றி
ஓம் குருவாரப் பிரியனே போற்றி
ஓம் குணம் தரும் குபேரா போற்றி
ஓம் குறை தீர்க்கும் குபேரா போற்றி
ஓம் கும்பத்தில் உறைபவனே போற்றி
ஓம் குண்டலம் அணிந்தவனே போற்றி
ஓம் குபேர லோக நாயகனே போற்றி
ஓம் குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
ஓம் கேடதனை நீக்கிடுவாய் போற்றி
ஓம் கேட்டவரம் அளிப்பவனே போற்றி
ஓம் கோடி நிதி அளிப்பவனே போற்றி
ஓம் சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
ஓம் சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
ஓம் திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
ஓம் திருவிழி அழகனே போற்றி
ஓம் திருவுரு அழகனே போற்றி
ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
ஓம் திருநீறு அணிபவனே போற்றி
ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி

குபேரர் போற்றி : 37 - 72 Nos.

ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
ஓம் துாய மனம் படைத்தவனே போற்றி
ஓம் தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி
ஓம் தேவராஜனே போற்றி
ஓம் பதுமநிதி பெற்றவனே போற்றி
ஓம் பரவச நாயகனே போற்றி
ஓம் பச்சை நிறப் பிரியனே போற்றி
ஓம் பவுர்ணமி நாயகனே போற்றி
ஓம் புண்ணிய ஆத்மனே போற்றி
ஓம் புண்ணியம் அளிப்பவனே போற்றி
ஓம் புண்ணிய புத்திரனே போற்றி
ஓம் பொன்னிறமுடையோனே போற்றி
ஓம் பொன்நகை அணிபவனே போற்றி
ஓம் புன்னகை அரசே போற்றி
ஓம் பொறுமை கொடுப்பவனே போற்றி
ஓம் போகம் பல அளிப்பவனே போற்றி
ஓம் மங்கலமுடையோனே போற்றி
ஓம் மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் மங்களத்தில் உறைவாய் போற்றி
ஓம் மீனலக்னத்தில் உதித்தாய் போற்றி
ஓம் முத்துமாலை அணிபவனே போற்றி
ஓம் மோகன நாயகளே போற்றி
ஓம் வறுமை தீர்ப்பவனே போற்றி
ஓம் வரம் பல அருள்பவனே போற்றி
ஓம் விஜயம் தரும் விவேகனே போற்றி
ஓம் வேதம் போற்றும் வித்தகா போற்றி
ஓம் சங்கரர் தோழனே போற்றி
ஓம் சமயத்தில் அருள்பவனே போற்றி
ஓம் சத்திய சொரூபனே போற்றி
ஓம் சாந்த சொருபனே போற்றி
ஓம் சித்ரலேகா பிரியனே போற்றி
ஓம் சித்ரலேகா மணாளனே போற்றி
ஓம் சிந்தையில் உறைபவனே போற்றி
ஓம் சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
ஓம் சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி

குபேரர் போற்றி : 73 - 108 Nos.

ஓம் சிவபூஜை பிரியனே போற்றி
ஓம் சிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
ஓம் சுந்தரர் பிரியனே போற்றி
ஓம் சுந்தர நாயகனே போற்றி
ஓம் சூர்பனகா சகோதரனே போற்றி
ஓம் செந்தாமரைப் பிரியனே போற்றி
ஓம் செல்வ வளம் அளிப்பவனே போற்றி
ஓம் செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
ஓம் சொக்கநாதர் பிரியனே போற்றி
ஓம் சௌந்தர்ய ராஜனே போற்றி
ஓம் ஞான குபேரனே போற்றி
ஓம் தனமளிக்கும் தயாபரா போற்றி
ஓம் தான்யலட்சுமியை வணங்குபவனே போற்றி
ஓம் வைர மாலை அணிபவனே போற்றி
ஓம் வைகுண்டவாசப் பிரியனே போற்றி
ஓம் நடராஜர் பிரியனே போற்றி
ஓம் நவதான்யம் அளிப்பவனே போற்றி
ஓம் நவரத்தினப் பிரியனே போற்றி
ஓம் கித்தியம் மிதி அளிப்பாய் போற்றி
ஓம் நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
ஓம் வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ஓம் ராவணன் சோதரனே போற்றி
ஓம் வடதிசை அதிபதியே போற்றி
ஓம் ரிஷி புத்திரனே போற்றி
ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
ஓம் இருள் நீக்கும் இன்பனே போற்றி
ஓம் வெண்குதிரை வாகனனே போற்றி
ஓம் கைலாயப் பிரியனே போற்றி
ஓம் மனம் விரும்பும் மன்னவனே போற்றி
ஓம் மணிமகுடம் தரித்தவனே போற்றி
ஓம் மாட்சிப் பொருளோனே போற்றி
ஓம் யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
ஓம் யௌவன நாயகனே போற்றி
ஓம் வல்லமை பெற்றவனே போற்றி
ஓம் குபேரா போற்றி போற்றி
குபேரன், தன்னுடைய தீவிர சிவ பக்தியின் காரணமாக செல்வத்திற்கு அதிபதியானவர். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் சிவ பக்தியில் சிறந்த விளங்கியதால் வட திசைக்கு அதிபதியாகவும், செல்வத்திற்கு அதிபதியாகவும் பொறுப்பு பெற்றார். மகாலட்சுமியை வழிபாட்டினை போன்று, குபேர வழிபாடும் செல்வத்தை பெருக்கக் கூடியதாகும். குபேரரை வழிபடுவதும், குபேர யந்திரம் வைத்து வழிபடுவதும், குபேர யாகம் செய்வதும் செல்வத்தை பெருக செய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.


Post a Comment

Previous Post Next Post