நவராத்திரியில் பந்த பாசங்களை நீக்கும் சிவனின் பாதையில், ஸ்ரீ புவனசுந்தரி மற்றும் சுரதன் ராஜாவின் வாழ்வியல் வெற்றிகள் சார்ந்த ஒரு குட்டி கதை. நவராத்திரி வழிபாட்டின் மகத்துவத்தை அறிவோம்
நவராத்திரி பந்த பாசங்களும் கவலையும் நீங்க ஸ்ரீ புவனசுந்தரி மகாத்மியம்

மகா புவனசுந்தரி மஹாத்மியம் : சுரதன் ராஜாவின் கதையும் மந்திரத்தின் மகிமையும்

1. சுரதன் ராஜாவின் தோல்வியும் முனிவரின் ஆறுதலும்

முன் காலத்தில் சுரதன் எனும் அரசன் தன் நாட்டை நல்ல முறையில் ஆண்டு வந்தான். அப்போது, பக்கத்து நாட்டை ஆண்டு வந்த மிலேச்சர்கள் திடீரென்று சுரதனின் நாட்டை வளைத்து முற்றுகையிட்டு தாக்கினர். போரில் சுரதன் தோல்வி அடைந்தான். அதனால், மனம் நொந்த சுரதன் யாவரையும் விடுத்து காட்டை அடைந்து, அங்கு எழுந்தருளியிருந்த சுமேதஸ் என்ற முனிபுங்கவரை கண்டு வணங்கி குறையை கூறி வருந்தினான். அதற்கு அந்த முனிவர் அவனை நோக்கி, 'அரசே அஞ்சாதே... இனி உனக்கு துன்பம் இல்லை. ஆயினும், என்னை போலவே நீயும் இலையை உண்டு இங்கேயே அமைதியுடன் இரு' என்று பணித்தார். சுரதனும் அவ்வாறே அவ்விடத்தில் நிம்மதியாக காலம் கழித்து வந்தான்.

2. சமாதி வைசியனின் வருத்தமும் பந்த பாசங்களின் விளக்கம்

ஒரு நாள் சுரதன் பொழுதுபோக்கிற்காக காலார சிறிது துாரம் நடந்து சென்றான். அப்போது வழியில் வெறுப்புணர்ச்சியுடன் இருந்த சமாதி என்ற வைசியனை பார்த்து, 'ஏன் நீ கலக்கம் கொண்டிருக்கிறாய்? வருத்தாதே நடந்ததை சொல்' என்று வினவினான். அதற்கு அந்த வைசியன், "நான் ஒரு செட்டி; ஏராளமான செல்வம் எனக்கு உண்டு. புதல்வர்கள் பலரும் எனக்கு உள்ளனர். ஆனால், அவர்கள் பேராசையால் என்னை அடித்து துரத்தி விட்டனர். அதனால் தான் நான் மனங்கலங்கி அமைதியிழந்து வருகிறேன்' என்றான். சுரதன் அவ்வணிகனை அழைத்துக் கொண்டு முனிவரிடம் வந்து, அவனது வரலாற்றையும் கூறினான். சுரதன் கூறியதை கேட்ட முனிவர் மனம் இரங்கி, 'வருந்த வேண்டாம். இவ்வுலகம் மாயையால் மூடப்பெற்றது. மாயையாகிய இருளால் மக்கள் அனைவரும் கவலையில் துன்புறுகின்றனர்.

3. புவனசுந்தரி மந்திரத்தின் ஆற்றலும் தேவிபூஜையின் சிறப்பும்

'ஒருவனுக்கு பணம் இருக்கிறது. ஆனால், அதை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்பான் அவன். மற்றொருவன் தன் குடும்பத்தை காப்பாற்ற பணம் இல்லை என்பான். இத்தகைய பந்த பாசங்களும், மனக்கவலையும் நீங்க வேண்டுமானால், தேவி பூஜை செய்ய வேண்டும். ‘ஸ்ரீ தேவி பூஜையால், நிறைவேறாதது எதுவும் இல்லை. ஆதலின், அத்தேவியின் பல வடிவங்களில் ஸ்ரீ புவனசுந்தரி எனும் திருப்பெயர் கொண்ட அன்னையை பூஜை செய்வது சாலச்சிறந்தது. பூஜைக்கேற்ப அர்ச்சனை, அர்ச்சனைக்கேற்ப ஹோமம், ஹோமத்திற்கேற்ப தான தர்மம் முதலியவற்றை செய்ய வேண்டும். இப்படி செய்யும் பூஜையின் சிறப்பை கூறி எல்லை காண முடியாது. 'நீங்கள் இருவரும் வேறு சிந்தனை இல்லாமல், இந்த புவனசுந்தரி மந்திரத்தை ஜபித்தால் மன நிறைவு உண்டாகும்' என்று கூறி, அவர்களுக்கு அம்மந்திரத்தை உபதேசித்தார்.

4. சுரதன் மற்றும் வைசியனின் வெற்றியும் முக்தியடைந்த பின் வாழ்க்கையும்

அந்த மந்திரத்தை அரசன் இடைவிடாமல் கூறி, தேவி குறித்து கடுந்தவம் செய்தான்; ஆனால், தேவி வரவில்லை. அரசன் மனம் தளராமல், 'தேவி எனக்கு காட்சி கொடுக்காவிட்டால் என் உயிரையே போக்கிக் கொள்வேன்' என்று கூறி, மீண்டும் மந்திரங்களை கூறி தவம் செய்ய ஆரம்பித்தான்.
அந்நிலையில் அவனுக்கு காட்சி கொடுத்த தேவி, அவன் இழந்த நாடும் அவனுக்கு திரும்ப கிடைக்க அருள் செய்தாள். அதேபோன்று, வணிகனும் அந்த மந்திரத்தை அவ்வாறே சொல்லி வர, தான் இழந்த பொருட்களை மீண்டும் பெற்றான். அவ்விருவரும் தேவியின் பக்தர்கள் ஆயினர். பின், அவர்கள் இவ்வுலக பற்றுகளை ஒழித்து, தீர்த்த யாத்திரை செய்து முக்தி அடைந்தனர்.

* * நவராத்திரி வழிபாடு : * *

நவராத்திரி 6 - ஆம் நாளில், அன்னையை இந்திராணி மற்றும் காத்யாயனி தேவியாகக் கருதி செம்பருத்திப் பூவால் பூஜை செய்ய வேண்டும். அன்று தேங்காய் சாதம், கூலைப்பருப்பு, எண்டல் ஆகியவை நைவேத்யமாக செய்து தெய்வத்தை வழிபட வேண்டும்.

This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Post a Comment

Previous Post Next Post