முளைப்பாரி வளர்ப்பு பாடல்: கான விதை எடுத்து வந்தோம் | காளியம்மன பாடி வந்தோம் | பயத்தம் விதை எடுத்துவந்தோம் | பத்திரகாளிய பாடி வந்தோம் | முத்து விதை எடுத்து வந்தோம் | முத்தாரம்மன்ன பாடி வந்தோம்.....

முளைப்பாரி வளர்ப்பு பாடல்:

கான விதை எடுத்து வந்தோம்

கான விதை எடுத்து வந்தோம்

காளியம்மன பாடி வந்தோம்

காளியம்மன பாடி வந்தோம்

பயத்தம் விதை எடுத்துவந்தோம்

பயத்தம் விதை எடுத்துவந்தோம்

பத்திரகாளிய பாடி வந்தோம்

பத்திரகாளிய பாடி வந்தோம்

நம்ம பத்திரகாளிய பாடி வந்தோம்

முத்து விதை எடுத்து வந்தோம்

அம்மா முத்து விதை எடுத்து வந்தோம்

முத்தாரம்மன்ன பாடி வந்தோம்

நம்ம முத்தாரம்மன்ன பாடி வந்தோம்

சோள விதை எடுத்து வந்தோம்

அம்மா சோள விதை எடுத்து வந்தோம்

சுடலை மாடன பாடி வந்தோம்

நம்ம சுடலை மாடன பாடி வந்தோம்

எள்ளு விதை எடுத்து வந்தோம்

எள்ளு விதை எடுத்து வந்தோம்

இசக்கி அம்மன பாடி வந்தோம்

இசக்கி அம்மன பாடி வந்தோம்

சடம்ப விதை எடுத்து வந்தோம்

அம்மா சடம்ப விதை எடுத்து வந்தோம்

சக்தி அம்மன பாடி வந்தோம்

நம்ம சக்தி அம்மன பாடி வந்தோம்

வடக்குத்தெரு தோழிகளா

வடக்குத்தெரு தோழிகளா

வாரிகளா முளை போட

வாரிகளா முளை போட

தெற்குத்தெரு தோழிகளா

அம்மா தெற்குத்தெரு தோழிகளா

திரண்டு நீங்க வாரிகளா

அம்மா திரண்டு நீங்க வாரிகளா

மேலத்தெரு தோழிகளா

மேலத்தெரு தோழிகளா

முலை போட வாரிகளா

அம்மா முலை போட வாரிகளா

கீழத்தெரு தோழிகளா

கீழத்தெரு தோழிகளா

கெளம்பி நீங்க வாரிகளா

கெளம்பி நீங்க வாரிகளா

கொசவனார் சொல்லையில

நம்ம கொசவனார் சொல்லையில

கொசப்பாத்தி எடுத்து வந்தோம்

கொசப்பாத்தி எடுத்து வந்தோம்

நாட்டு வழக்கப்படி

நம்ம நாட்டு வழக்கப்படி

நல்லோர்கள் செய்தபடி

நம்ம நல்லோர்கள் செய்தபடி

ஆத்தாளுக்கு முளைப்பாரி

ஆத்தாளுக்கு முளைப்பாரி

அழகாக போடுதற்கு

அழகாக போடுதற்கு

நாளு நல்ல கிழமை பார்த்து

நாளு நல்ல கிழமை பார்த்து

நல்ல நாளும் தான் பார்த்து

நல்ல நாளும் தான் பார்த்து

பண்பாக நாள் பார்த்து

பண்பாக நாள் பார்த்து

பாங்குடனே நாள் குறித்து

பாங்குடனே நாள் குறித்து

ஆத்தாளுக்கு உகந்ததொரு

ஐந்து வகை தானியமாம்

அம்மா ஐந்து வகை தானியமாம்

ஈஸ்வரிக்கு உகந்ததொரு

அம்மா ஈஸ்வரிக்கு உகந்ததொரு

ஏழுவகை தானியமாம்

அம்மா ஏழு வகை தானியமாம்

உத்தமிக்கு உகந்ததொரு

அம்மா உத்தமிக்கு உகந்ததொரு

ஒன்பது வகை தானியமாம்

அம்மா ஒன்பது வகை தானியமாம்

பத்தினிக்கு உகந்ததொரு

பத்தினிக்கு உகந்ததொரு

பத்து வகை தானியமாம்

அம்மா பத்து வகை தானியமாம்

கொண்டு வந்த தானியத்த

கொண்டு வந்த தானியத்த

குடம் அதில ஊர வச்சி

குடம் அதிலே ஊர வைத்து

வாங்கி வந்த தானியாத்த

வாங்கி வந்த தானியாத்த

வாளியில ஊறவைத்து

பத்துவகை தானியாத்த

பத்துவகை தானியாத்த

பானையில ஊறவைத்து

அம்மா பானையில ஊறவைத்து

கடலை சிறு பயிறு

கடலை சிறு பயிறு

காராமணி பயிறு

காராமணி பயிறு

மொச்சை சிறு பயிறு

மொச்சை சிறு பயிறு

முத்து மணி பயிறு

முத்து மணி பயிறு

பாசி சிறு பயிறு

பாசி சிறு பயிறு

பவளமணி பயிறு

பவளமணி பயிறு

தட்டான் சிறு பயிறு

தட்டான் சிறு பயிறு

தங்கமணி பயிறு

தங்கமணி பயிறு

துவரை சிறு பயிறு

துவரை சிறு பயிறு

துளசி மணி பயிறு

துளசி மணி பயிறு

அத்தனை தானியமும்

அம்மா அத்தனை தானியமும்

அழகாக சேகரித்து

அழகாக சேகரித்து

கொண்டு வந்த தானியத்த

கொண்டு வந்த தானியத்த

குடம் அதிலே ஊரவச்சி

வாங்கிவந்த தானியத்த

வாங்கி வந்த தானியத்த

வாளியில ஊரவச்சி

வாளியில ஊரவச்சி

பத்துவகை தானியத்த

பத்துவகை தானியத்த

பத்துவகை தானியாத்த

பத்துவகை தானியாத்த

பானையில ஊறவைத்து

பானையில ஊறவைத்து

வண்ண கொட்டடான் ரெண்டெடுத்து

வண்ணக் கொட்டடான் ரெண்டெடுத்து

வளரும் பிள்ளை முத்தெடுத்து

வளரும் பிள்ளை முத்தெடுத்து

சின்ன கொட்டடான் ரெண்டெடுத்து

அம்மா சின்ன கொட்டடான் ரெண்டெடுத்து

சிறிய பிள்ளை முத்தெடுத்து

சிறிய பிள்ளை முத்தெடுத்து

நார் கொட்டான் ரெண்டெடுத்து

நார் கொட்டான் ரெண்டெடுத்து

நடக்கும் பிள்ளை முத்தெடுத்து

நடக்கும் பிள்ளை முத்தெடுத்து

ஓலை கொட்டான் ரெண்டெடுத்து

ஓலை கொட்டான் ரெண்டெடுத்து

ஓடும் பிள்ளை முத்தெடுத்து

ஓடும் பிள்ளை முத்தெடுத்து

சம்சாரி பிஞ்சையில

சம்சாரி பிஞ்சையில

சாமி வைக்கலும் எடுத்து வந்தோம்

சாமி வைக்கலும் எடுத்து வந்தோம்

விவசாயி பிஞ்சையில

விவசாயி பிஞ்சையில

விறகு வைக்கலும் எடுத்து வந்தோம்

விறகு வைக்கலும் எடுத்து வந்தோம்

பூசாரி பிஞ்சையில

பூசாரி பிஞ்சையில

புது வைக்கலும் எடுத்துவந்தோம்

நல்ல புது வைக்கலும் எடுத்துவந்தோம்

ஆட்டார் தொழு தொறந்து

ஆட்டார் தொழு தொறந்து

ஆட்டெருவும் எடுத்து வந்தோம்

ஆட்டெருவும் எடுத்து வந்தோம்

மாட்டார் தொழு தொறந்து

மாட்டார் தொழு தொறந்து

மாட்டெருவும் எடுத்துவந்தோம்

மாட்டெருவும் எடுத்துவந்தோம்

ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில

ஒரு செம்பு நீர் எடுத்து

ஒரு செம்பு நீர் எடுத்து

வட்ட நல்ல ஓட்டிலையும்

வட்ட நல்ல ஓட்டிலையும்

வைக்கோலையும் மேல் பரப்பி

வைக்கோலையும் மேல் பரப்பி

வைக்கோலுக்கு மேலேயல்லோ

வைக்கோலுக்கு மேலேயல்லோ

வகையுடனே மணல் பரப்பி

வகையுடனே மணல் பரப்பி

மணலுக்கு மேலேயல்லோ

மாட்டெருவு தூள் பரப்பி

மாட்டெருவு தூள் பரப்பி

தூள் எருவு மேலேயல்லோ

சுத்தமுள்ள நீர் பரப்பி

சுத்தமுள்ள நீர் பரப்பி

நல்லதொரு ஓட்டிலையும்

நல்லதொரு ஓட்டிலையும்

நவதானியம் தான் விதைத்து

நவதானியம் தான் விதைத்து

பாங்கான ஓட்டிலையும்

பாங்கான ஓட்டிலையும்

பல தானியம் தான் விதைத்து

பல தானியம் தான் விதைத்து

தங்க நல்ல ஓட்டிலையும்

தங்க நல்ல ஓட்டிலையும்

தானியத்தை தான் விதைத்து

தானியத்தை தான் விதைத்து

பொன்னு நல்ல ஓட்டிலையும்

பொன்னு நல்ல ஓட்டிலையும்

போதும் மட்டும் விதை விதைத்து

போதும் மட்டும் விதை விதைத்து

சக்திக்கு முளைப்பாரி

சக்திக்கு முளைப்பாரி

சரிவர தான் போட்டு

சரிவர தான் போட்டு

சுத்தமுடன் தான் இருந்து

சுத்தமுடன் தான் இருந்து

சுகமுடனே பாதுகாத்து

சுகமுடனே பாதுகாத்து

வளர்த்தேனே என்முளைய

வளர்த்தேனே என்முளைய

வைகை ஆத்து தண்ணியில

வைகை ஆத்து தண்ணியில

போறீரோ என் முளையே

போறீரோ என் முளையே

வணங்கி வரும் பேர்களுக்கு

அம்மா வணங்கி வரும் பேர்களுக்கு

வாக்கு நல்ல வரம் கொடுப்பாள்

வாக்கு நல்ல வரம் கொடுப்பாள்

கும்பிடும் பேர்களுக்கு

கும்பிடும் பேர்களுக்கு

குறைகளை தீர்த்து வைப்பாள்

அம்மா குறைகளை தீர்த்து வைப்பாள்

குறைகளை தீர்த்து வைப்பாள்

குறைகளை தீர்த்து வைப்பாள்

அழகுடைய காளியம்மாள்

அழகுடைய காளியம்மாள்

கேட்டவருக்கு கேட்டவரம்

கேட்டவருக்கு கேட்டவரம்

இன்பமுடன் தான் கொடுப்பாள்

இன்பமுடன் தான் கொடுப்பாள்

அழகுடைய முத்தாரம்மா

அழகுடைய முத்தாரம்மா



முளைப்பாரியை இப்படி தான் வளர்க்கனும் - முளைப்பாரிக்குள் இருக்கும் கதை தெரியுமா?

தென்மாவட்டங்களில் மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன் கோயில் திருவிழாக்கள் என்றாலே ஆடல் பாடலுக்கு இடையே அங்கு தவறாமல் இடம் பெறுவது முளைப்பாரிகள் தான். நன்கு செழிப்புடன் வளர்ந்த முளைப்பாரிகள் அதை சுற்றி குழுவாக கும்மியடிக்கும் பெண்கள், அதற்கேற்ப இசைக்கப்படும் நாட்டுப்புற பாடல் என அந்த நிகழ்வே பார்க்க அழகாக இருக்கும்.

முந்தைய காலத்தில் விவசாயிகள் தங்களிடம் இருந்த விதைகளின் முளைப்பு திறன்களை சோதிக்க பயன்படுத்தியது தான் இந்த முளைப்பாரி. முதலில் முளைப்பாரிக்கு தேவையான பயறு வகைகளை வாங்கி வைத்துவிட்டு அதோடு மண் சேர்த்து மாட்டு சாணம், ஆண்டு சாணம் போன்றவற்றை உரமாக போட்டு ஒரு மண் சட்டியில் போட்டு, தண்ணீர் விட்டு வளர்க்க தொடங்குவார்கள். சரியாக ஏழு நாட்கள் கழித்து எட்டாவது நாளில் முளைப்பாரி நன்கு வளர்ந்திருக்கும், இதற்கிடைப்பட்ட காலத்தில் முளைப்பாரி ஒருவர் கைப்பட இருட்டு அறையில் வைக்கப்பட்டு இருக்கும். மற்றவர்கள் இதனை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

முளைப்பாரி வளர்ந்த எட்டாவது நாளே முளைப்பாரி களை பார்க்க முடியும். அதுவரை முளைப்பாரி வளர்ப்பவரின் பராமரிப்பில் இருக்கும். இது குறித்து பேசிய 35 ஆண்டுகளாக முளைப்பாரி வளர்த்து வரும் பேச்சியம்மாள் பாட்டி, முளைப்பாரி நன்கு வளர்ந்தால் அந்த ஊர் அந்த ஆண்டு செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கை.

ஒருவேளை முளைப்பாரி சரியாக வளரவில்லை என்றால் மக்கள் மனம் வருந்துவார்கள் என்பதாலே முளைப்பாரி வளரும் காலத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்காமல் , தினமும் பூஜை செய்து வளர்த்து வருகிறேன். அம்மன் அருளால் எப்போதும் முளைப்பாரி நன்றாக வளர்ந்து வருகிறது என்றார்.

இருட்டறையில் வளர்க்கப்படும் முளைப்பாரியின் ரகசியம்!

அம்மன் கோயில் முளைப்பாரியில் வேளாண்மையும் பாட்டும் ஆட்டமும் வளமைக் கோட்பாடும் அறிவியலும் இணைந்துள்ளதை உணரலாம். எப்படி என்று பார்ப்போமா?

ஜப்பான், சீனா, திபெத், மெக்சிகோ போன்ற உலக வேளாண் குடிகளின் வேளாண் பணிகள் ஜூனின் பிற்பகுதியில் (ஜூன் 21 solar solstice முதல்) தொடங்கும். தமிழகத்திலும் ஆடி மாதத்தில் விதைப்புப் பணிகள் (sowing seeds) தொடங்கி விடும். அம்மன் கோயில்களின் முளைப்பாரி விழா விதைப்பு சார்ந்த ஓர் வேளாண் வழிபாட்டுச் சடங்காகும்.

முளைக் கொட்டு விழா:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முளைக்கொட்டு திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அம்மன் முன்னிலையில் முளைப்பாரி வளர்க்கப்படும். அம்மன் மட்டும் ஆடி மாதம் தனியாகக் கோயிலுக்குள் பல்லக்கில் வீதி வலம் வருவாள். அதனால் அவ் வீதிக்கு ஆடி வீதி என்று பெயர். அம்மன் சந்நிதியில் இளம் பெண்கள் முளைக் கொட்டு கொட்டுவார்கள்

முளைப்பாரியின் அறிவியல்:

நடப்பு ஆண்டில் விளைச்சல் நன்றாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தை, மாசி, பங்குனி, ஆடி மாதங்களில் தமிழகத்தில் முளைப்பாரி வளர்ப்பர். முளைப்பாரி ஓர் முன்னறி அறிவியல் (pilot study). தட்டப்பயிறு, மொச்சை பயிறு, பச்சைப்பயிறு போன்றவற்றை ஒரு மண் சட்டியில் விதைத்து இருட்டு அறையில் வைத்து தண்ணீர் தெளித்து வளர்த்து அதன் வளர்ச்சியைக் கண்டு தெளிவர்.

ஆடிப்பட்டம் தேடி விதை

ஆடி மாதத்தில் நம் ஊர்களில் பெண்கள்

அவரை தொவர மொச்ச

அஞ்சு வகை ஆமணக்கு

எள்ளு சிறு பயறு

ஏத்த மதிப்பயறு

கடலை சிறு பயறு

காராமணிப் பயறு

என்று முளைப்பாரி பாடல்களில் பெயர்களைச் சொல்லிப் பாடுவார்கள்

அடுத்ததாக அவர்கள் வயலில் நெல் விதைப்பு தொடங்கும்போது, ஆத்தூர் கிச்சடி சம்பா

அல்லிலே லேலோ

அழகான நெல் எடுத்து

தில்லாலே லேலோ

அளவுடனே விதை விதைப்போம் அல்லிலே லேலோ

என்று பாடிக்கொண்டே விதைப்பபார்கள்.

முளைப்பாரி எடுத்தல்:

அம்மன் கோவில்களில் முளைப்பாரி என்ற வளமைச்சடங்கு (fertility ritual) 15 நாட்கள் நடைபெறும். முதல் செவ்வாய் அன்று செவ்வாய் சாட்டுவர். அன்று விழா அறிவிக்கப்டும். விரதம் தொடங்கும். வளரிளம் பெண்கள் பயறு விதைகளை (முத்துக்கள்) வீடு வீடாக போய்ச் சேகரித்து வருவர்.

சிலர் தம் தம் வீடுகளில் வைத்து முளைப்பாரி வளர்ப்பர். சுற்றிலும் ஒரு துணியை கட்டி சூரிய ஒளி அதிகம் படாத வகையில் வளர்க்க வேண்டும். சில பகுதிகளில் கோயில்களில் தென்னங் கிடுகுகளால் மூடி வைத்து வாயில் வெள்ளைத் துணியை கட்டிக் கொண்டு எச்சில் தெறிக்காமல் கோயில் பூசாரி முத்து போட்ட மண் சட்டிகளுக்கு தண்ணீர் தெளிப்பர்.

வளர்ந்த முளைப்பாரி நல்ல பொன் நிறத்தில் காணப்பட்டால் அந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வார்கள்; நிறம் மங்கி காணப்பட்டால் அது வேண்டாம்.

மூன்றாம் செவ்வாய் அன்று அதாவது15 நாள் கழித்து வெளியே கொண்டு வந்து அம்மன் கோவில் முன்வைத்து சுற்றிலும் முளைப்பாரி பாடல்களை பாடி பின்பு தலையில் தூக்கிச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் வளர்ந்த பயறு செடிகளை பிய்த்துப் போட்டுவிட்டு மண்ணையும் கொட்டி விட்டு வெறும் சட்டியை கொண்டு வருவர். இதை முளைப்பாரி கரைத்தல் என்பர்.

முளைக் கொட்டு:

15 நாட்களும் கோவில் முற்றத்தில் முளைப்பாரி கொட்டுதல் என்ற ஆட்டம் நடைபெறும். சில ஊர்களில் ஆண்களும் தனியாக வளைதடி கொண்டு முளைப்பாரி கொட்டுவர். பெண்கள் வளைதடி கொண்டும் அல்லது கைகளைத் தட்டியும் முளைப்பாரி கொட்டுவர். இதற்குப் பெயர் கும்மி கொட்டுதல் அல்ல. முளைப்பாரி கொட்டுதல் ஆகும். இதற்கென்று முளைப்பாரி பாடல்கள் உண்டு. அப்பாட்டை பாடும் பெண்களும் ஆண்களும் தனித்தனியே அவரவர் பகுதியில் தொடர்ந்து பாடி வருவர்.

அம்மன் கோயில் முளைப்பாரியில் வேளாண்மையும் பாட்டும் ஆட்டமும் வளமைக் கோட்பாடும் அறிவியலும் இணைந்துள்ளதை உணரலாம்.



This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:
  Content publishing
  Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:
  Active Facebook and Instagram account
  Basic knowledge of using mobile and social media

For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160

a. Online Part Time Jobs from Home

b. Work from Home Jobs Without Investment

c. Freelance Jobs Online for Students

d. Mobile Based Online Jobs

e. Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Post a Comment

Previous Post Next Post