காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா... || பள்ளிக்கட்டு சபரி மலைக்கு... கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை || பம்பா விளக்கு...பம்பா விளக்கு... || ஐயப்பன் பாடல் || ஆன்மீக பாடல்கள்

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா:

ஐயப்பா... சாமி ஐயப்பா...

சரணம் ஐயப்பா...சாமி ஐயப்பா...



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...

உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...



மாய வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா...

சபரி வீடுதனை தேடி வந்தோம் ஐயப்பா...



நெய்யபிஷேகம்...பாலபிஷேகம்...தேனபிஷேகம் சாமிக்கே...

சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே...



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...

உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...



ஏட்டினிலே எழுத வைத்தாய் ஐயப்பா...

எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா...



நாங்கள் பேட்டை துள்ளி ஆடும் போது ஐயப்பா...

நீ ஆட்டம் ஆடி வந்திடுவாய் ஐயப்பா....



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...

உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...



நீலவிழி கண்ணனுக்கும் நீறணிந்த ஈசனுக்கும் பாலகனாய் அவதரித்த ஐயப்பா...

வேலவனின் அருமைத்தம்பி... காலமெல்லாம் உனை வேண்டி

நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா...



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...

உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...

மணிகண்டா உன் கருணை அமுதமப்பா...

உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா...

மின்னும் காந்த மலையில் ஜோதி தெரியுதப்பா...

சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா...



நெய்யபிஷேகம்... பாலபிஷேகம்...தேனபிஷேகம் சாமிக்கே...

சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே...



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா...

உன்னை காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா...



ஐயப்பா... சாமி ஐயப்பா...

சரணம் ஐயப்பா...சாமி ஐயப்பா...



பள்ளிக்கட்டு சபரி மலைக்கு... கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை:

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்

இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்

உன் திருவடியை காண வந்தோம்...



பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே அய்யப்போ

(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)



பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)



நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே

ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார்

(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)



கார்த்திகை மாதம் மாலையணிந்து

நேர்த்தியாகவே விரதமிருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே உன்னைபார்க்க வேண்டியே தவமிருந்து (2)



இருமுடி எடுத்து எருமேலி வந்து

ஒரு மனதாகி பேட்டை துள்ளி

அருமை நண்பராம் வாவரை தொழுது

அய்யனின் அருள் மலை ஏறிடுவார்

(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)



அழுதை ஏற்றம் ஏரும் போது

அரிகரன் மகனை துதித்து செல்வார்

வழி காட்டிடவே வந்திடுவார்

அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்



கரிமலை ஏற்றம் கடினம் கடினம்

கருணை கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்தவுடனே

திருநதி பம்பையை கண்டிடுவார்

(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)



கங்கை நதி போல் புண்ணிய நதியாம்

பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார்

சங்கடமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்



தேக பலம் தா பாத பலம் தா

தூக்கிவிடையா ஏற்றிவிடையா

தேக பலம் தா பாத பலம் தா



தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்

பாத பலம் தா என்றல் அவரும் பாதத்தை தந்திடுவார்

நல்லபாதையை காட்டிடுவார்

(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)



சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்

சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்



சபரிமலை தனை நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதி என்று அவனை சரணடைவார்

மதி முகம் கண்டே மயங்கிடுவார்

ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்



பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே அய்யப்போ

சுவாமி சரணம் அய்யப்ப சரணம்



பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி



சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா



பம்பா விளக்கு...பம்பா விளக்கு...

ஆனந்த மயனே...

ஓம் ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே... சுவாமியே சரணம் ஐயப்பா...



பம்பா விளக்கு...பம்பா விளக்கு...பரந்தாமன்

அருள் விளக்கு...

தெம்பாய் நடக்க... மலைகளை கடக்க...கணபதியே துணை நமக்கு...'



தீவினை இருளில் திரிகளின் நாவில் தீர்ந்திடும் ஐயனின் நெய்விளக்கு

பாவம் பிணிகளை சுட்டு பொசுக்கும் பந்தள ராஜன் கை விளக்கு...



ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)



காலையில் உதிக்கும் சூரியக்கதிர்கள்...கருணாமூர்த்தியின் நெய் விளக்கு...

ஆயிரம் கரங்களில் வெளிச்சத்தை ஊட்டும்...ஐயனின் நம்பிக்கை விளக்கு...



ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

அந்தர சுந்தர சந்தன நிலவு...சன்னிதி வாசலில் பொன் விளக்கு

பம்பையில் ஆடி அசைந்திடும் தெப்பங்கள்...அருள் தரும் ஆண்டவன் அகல் விளக்கு...

(தீவினை இருளில்)..

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)



சுவாமியே...ஐயப்போ...ஐயப்போ... சுவாமியே...

சுவாமி சரணம்...ஐயப்ப சரணம்...ஐயப்ப சரணம்...சுவாமி சரணம்....



வானிலே தோன்றும் தாரகை மீன்கள்... சந்தன வாசனின் சரவிளக்கு...

கானக மரங்களின் கற்பக பூக்கள்...கரிமலை நாதனின் கர விளக்கு...



ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

மாணிக்க மரகத பவளங்கள் வைரம்... மணிகண்ட மார்பின் அணிவிளக்கு...



ஆனந்த புன்னகை அருள்தரும் பூமலை...ஹரிஹரசுதனே மணிவிளக்கு...

(தீவினை இருளில்)..

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)



ஆனந்த மயனே.. ஹரிஹர சுதனே...ஐயா சரணம்...சுவாமியே சரணம்...

(பம்பா விளக்கு...பம்பா விளக்கு...)



This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:
  Content publishing
  Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:
  Active Facebook and Instagram account
  Basic knowledge of using mobile and social media

For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160

a. Online Part Time Jobs from Home

b. Work from Home Jobs Without Investment

c. Freelance Jobs Online for Students

d. Mobile Based Online Jobs

e. Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Post a Comment

Previous Post Next Post