ஐயப்பன் பஜனை பாடல்கள் – Ayyappa bajans
பாடல் 1: எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது
(எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது
(எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது
(எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது... ஓம் ஸ்வாமியே.... சரணம் ஐயப்பா
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது
(எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்.
(எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
பாடல் 2: சுவாமியே…….. அய்யப்போ. அய்யப்போ….. சுவாமியே
சுவாமியே…….. அய்யப்போஅய்யப்போ….. சுவாமியே
சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்
தேவன் சரணம்….. தேவி சரணம்
தேவி சரணம்….. தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்…. பகவதி சரணம்
பகவதி சரணம்… பகவான் சரணம்
சங்கரன் சரணம்…. சங்கரி சரணம்
சங்கரி சரணம்…. சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…… கட்டும் கட்டு
யாரை காண…. சுவாமியை காண
சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்… இப்போ கிட்டும்
தேக பலம் தா… பாத பலம் தா
பாத பலம் தா… தேக பலம் தா
ஆத்மா பலம் தா… மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே
சுவாமிக்கே… நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே
சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்…… சுவாமிக்கே
சுவாமிக்கே… அவலும் மலரும்
சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்
தேவன் பாதம்… தேவி பாதம்
தேவி பாதம்… தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்
பாடல் 3: பகவான் சரணம் பாடல் வரிகள்… Bhagavan saranam lyrics Tamil
பகவான் சரணம் பகவதி சரணம்பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா (பகவான்)
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே – ஐயப்போ ஐயப்போ – சுவாமியே
சுவாமியே – ஐயப்போ ஐயப்போ – சுவாமியே (பகவான்)
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
பாலபிஷேகம் உனக்கப்பா – இப்
பாலனை கடைகண் பாரப்பா
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்
இருமுடிக் கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடிக் கட்டு
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம் (பகவான்)
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா – உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா
நெய் அபிஷேகம் உனக்கப்பா – உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா – மனம் வையப்பா (பகவான்)
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா (பகவான்)
பாடல் 4: பந்தளபாலா ஐயப்பா – panthalabala ayyappa lyrics Tamil
பந்தளபாலா ஐயப்பா –பரமதயாளா ஐயப்பா
பரமபவித்ரனே ஐயப்பா
பக்தருக்கருள்வாய் ஐயப்பா!
நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில்
எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா!
ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே
ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!.
பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து
பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா!
சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே
சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா!
SPONSORSHIP:
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
Tags
ஆன்மீக பாடல்கள்

