காரிய தடை நீக்கும் - விநாயகர் துதி | Vinayagar Songs | பிள்ளையார் பிள்ளையார் | வெள்ளிக் கொம்பன் | விநாயகனே வினை தீர்ப்பவனே | பக்தி பாடல்கள்

பிள்ளையார் பிள்ளையார்:
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரசமர நிழலிலே
அருமையாக வீற்றிருந்து வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
வேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்
பார்வதியின் மைந்தனாம் பார்புகழும் பிள்ளையார்
மஞ்சளிலே செய்திடினும் மண்ணனாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
சங்கரனின் புதல்வனாம் சாத்திரத்தின் முதல்வனாம்
சகலத்திற்கும் மூலனாம் சக்திவாய்ந்த பிள்ளையார்
வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
நெல்லி மரத்து நிழலிலே நின்றிருக்கும் பிள்ளையார்
பக்தி தரும் பிள்ளையார் முக்தி தரும் பிள்ளையார்
ஆதரிக்கும் பிள்ளையார் ஆனைமுக பிள்ளையார்
அருளை அள்ளி தந்திடும் ஆண்டவனாம் பிள்ளையார்!!

வெள்ளிக் கொம்பன் விநாயகனே:
வெள்ளிக் கொம்பன் விநாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே
அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா
ஆனைமுகனே விநாயகனே (வெள்ளிக்)

அகமும் புறமும் இருப்பவனே
அடியார்கள் துயர் துடைப்பவனே
ஆற்றோரத்திலும் குளக்கரை தனிலும்
அமர்ந்தர சாட்சி புரிபவனே (வெள்ளிக்)

ஓங்காரப் பொருளின் தத்துவமே
உள்ளத்தில் குடிகொண்டவனே
உன்புகழ் பாடும் பக்தர்கள் குறையை
உடனடியாகத் தீர்ப்பவனே (வெள்ளிக்)

பக்தர்கள் நாங்கள் ஒன்றுகூடி
பாத மலர்களைப் பணிகின்றோம்
இங்கு எழுந்து அருள வேண்டுமய்யா
எங்கள் குறைகளைத் தீருமய்யா (வெள்ளிக்)

விநாயகனே வினை தீர்ப்பவனே:
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே!!


Post a Comment

Previous Post Next Post