அபிக்ஷேகப் பாடல் - பிரதோஷ நாள் | சிவன் அபிக்ஷேகப் பாடல் | பிரதோஷ பாடல் | எண்ணெய் முதல் கும்பம் வரை | சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது பாடும் பாடல்கள்

அபிக்ஷேகப் பாடல் - பிரதோஷ நாள்:
எண்ணெய்:
எண்ணங்கள் ஈடேற, எங்கள் உள்ளம் தான் குளிர,
எண்ணெய் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

மாவு:
மாந்தரெல்லாம் உயர்ந்திடவே, மாநிலமும் செழித்திடவே
மாவால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

மஞ்சள்:
மங்கையர்கள் மனம் குளிர, மங்கள நலம் பொங்கிடவே
மஞ்சள் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

வாசனைப் பொடி:
வாசமெல்லாம் பொங்குதய்யா வாசனைப் பொடி அபிக்ஷேகம்
பாபம் தீர உன்னைக் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

பால்:
வாசனைகள் பல சேர்த்து குங்குமப்பூ அதிலிட்டு
பாலால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

தயிர்:
தரணி தனை ஆள்பவனே, எங்கள் தாயுமானவனே!
தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

பஞ்சாமிர்தம்:
தஞ்சமென்று வருபவர்க்கு வஞ்சமின்றி அருள்பவனே
பஞ்சாமிர்தம் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

தேன்:
பூக்கள் எல்லாம் உனக்காக மலர்கள் எல்லாம் தேன் சிந்த
தேனால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

இளநீர்:
இளகுதம்மா கல் மனமும் இனியவனே உனைக்காண
இளநீர் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

விபூதி:
வேதமுதல் நீயன்றோ வினைகள் எல்லாம் தீர்ப்பவனே
விபூதி அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

எலும்பிச்சை:
ஏழைகளின் நாயகனே! எங்கள் குலம் காப்பவனே
எலுமிச்சம் பழம் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

பன்னிர்:
பத்துக் காதம் மணக்குதய்யா பன்னிரண் வாசம் அய்யா
பன்னிர் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

சந்தனம்:
சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தானமோ
சந்தனத்தால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

சொர்ணம்:
சொர்ணத்தால் அபிஷேகம் செல்வத்தை தங்கவைக்கும்
வர்ணம் போல ஈர்க்க வைக்கும் புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

அன்னம்:
அங்கிங் கென்னாதவனே
அன்பர் உள்ளம் ஆள்பவனே
அன்னாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

குங்குமம்:
குங்குமத்தால் அபிஷேகம் குறைவற்ற வாழ்வு தரும்
மங்களங்கள் கூடி வரும் புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

கும்பம்:
குற்றங்கள் களைபவனே குறைகள் எல்லாம் தீர்ப்பவனே
கும்பாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம் (நாங்கள்)
ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா


Post a Comment

Previous Post Next Post