பிரதோஷ நாளில் சிவன் நந்தி பிரதோஷ பாடல்கள் | 1. பிரதோஷம் சிவனுக்கு பிரதோஷம் | 2. ஓம் நமக்சிவாய | 3. சங்கரசிவா சிவசங்கரசிவா சம்போ மகாதேவ சங்கரசிவா

பிரதோஷம் சிவனுக்கு பிரதோஷம்:
பிரதோஷம் சிவனுக்கு பிரதோஷம்
திரயோதசி தினமதிலே பிரதோஷம்
அது தீராத வினை தீர்க்கும் பிரகாசம்
அது தீராத வினை தீர்க்கும் பிரகாசம்
தேவாதி தேவன் அவன் தாண்டவம்
திருத் தாண்டவம் அங்கே தேவர்களும்
முனிவர்களும் தொழுதிடும் காலம் (பிரதோஷம்)

பஞ்சசேஷ்டி சென்று வந்தால் வினைதிரும்
அங்கே பஞ்சபூத நாயகனின் அருள்சேரும்
பார்ப்பவர் மனம் எல்லாம் குளிர்ந்திருக்கும்
அங்கே பார்வதியாள் திருமுகமும் மலர்ந்திருக்கும் (பிரதோஷம்)

பூவண்ணர் என்ற பெயர் கொண்டவனே
செண்பகவல்லி துணை கொண்டவனே
அகஸ்தியர் பூஜை செய்த புண்ணியனே
உந்தன் அடிபணிந்தோம் சரமப்பா சங்கரனே (பிரதோஷம்)

சிவனுக்கு முன்னாலே அமர்த்தவனே
சிந்தையிலே சதா சிவனை கொண்டவனே
நந்தி தேவனே பிரதோஷ நாயகனே
உந்தன் கொம்பிரண்டின் மத்தியிலே
சிவனைக் கண்டால் நங்கள் கோரிவந்த
காரியங்கள் கைகூடும் (பிரதோஷம்)

ஓம் நமக்சிவாய:
ஓம் நமக்சிவாய! சிவாய நமஓம்
சிவாய நமஓம் நமசிவாய
சிவசிவ சிவசிவ சிவாய நமஓம்
சிவாய நமஓம் பவாய நமஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய
சற்குரு ஜெயகுரு சச்சிதானந்த குரு!!

சங்கரசிவா:
சங்கரசிவா சிவசங்கரசிவா சம்போ மகாதேவ சங்கரசிவா
சாம்ப சதா சிவா சங்கரசிவா சம்போ மகாதேவ சங்கரசிவா
கங்கா சடாதர சங்கரசிவா கைலாசவாசா சங்கரசிவா
முக்கண் அப்பனே சங்கரசிவ
மூவர்க்கும் முதல்வனே சங்கரசிவா
உடையொரு பாகா சங்கரசிவா உமாபதி சங்கரசிவா
பம்பரனார் சங்கரசிவா பரமேஸ்வரனே சங்கரசிவா
வெண்ணீர் அணிந்தவனே சங்கரசிவா
விடையேறும் பாகா சங்கரசிவா
நஞ்சனி கண்டனே சங்கரசிவா
நர்த்தன சுந்தரனே சங்கரசிவா!!


Post a Comment

Previous Post Next Post