பிரதோஷ நாளில் பாடும் சிவன் பாடல்கள் | 1. அரகர சிவசிவ அம்பலவாணா | 2. சந்திரசேகரா சிவசந்திரசேகரா | 3. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய - பக்தி பாடல்கள்

அரகர சிவசிவ அம்பலவாணா:
அரகர சிவசிவ அம்பலவாணா
ஆனந்த தாண்டவ அம்பலவாணா
தில்லையம்பலனே அம்பலவாணா
சிவகாமிநாதனே அம்பலவாணா
கற்றை சடையானே அம்பலவாணா
கனகசபேசனே அம்பலவாணா
சிற்சபேசனே அம்பலவாணா
சிதம்பரேசனே அம்பலவாணா
பொன்னம்பலனே அம்பலவாணா, வெள்ளியம்பலனே அம்பலவாணா
அம்பலவாணா அம்பலவாணா ஆடிய பாதா அம்பலவாணா!

சந்திரசேகரா:
சந்திரசேகரா சிவசந்திரசேகரா
கௌரிநாதா பாசி பாசி சந்திரசேகரா
செஞ்சுடாதரா சிவசெஞ்சுடாதரா
காம காண லோல விநோத ஜம்புகேஸ்வரா
ரிஷப வாகனா சிவரிஷப வாகனா
ரிஷப வாகனா சிவநாகபூஷணா
சக்தி தாண்டவா சிவசக்தி தாண்டவா
நித்யானந்த தாண்டவா பிரம்மானந்த தாண்டவா
நித்யானந்த தாண்டவா பிரம்மானந்த தாண்டவா!!

ஓம் நமசிவாய:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே தினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம் அது விடாத
விணை தொடாத படி காக்கும் (2)   (ஓம் நமசிவாய)

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய (2)
அருணகிரீசனே சிவமலை வாசனே
அமுதென ஆகுமே உன் திரு நாமமே
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே
ஓம் நமஹ சிவனே நமஹ
ஓம் நமஹ ஹர ஓம் நமஹ (ஓம் நமசிவாய)

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய (2)

மந்திர கீதமாய் வந்தொலி செய்யுமே
மாமலை உன்னையும் உருகிட செய்யுமே
பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே
உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே
ஓம் நமஹ சிவனே நமஹ ஓம் நமஹ ஹர ஓம் நமஹ (ஓம் நமசிவாய)

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம் அது விடாத
விணை தொடாத படி காக்கும் (2)  (ஓம் நமசிவாய)




Post a Comment

Previous Post Next Post