பிரதோஷ நாளில் பாடும் சிவன் நந்தி பாடல்கள் | 1. நாட்டமுள்ள நந்தி | 2. நந்தி வாகனா | 3. பெற்ற தாயை | 4. என் அப்பன் அல்லவா

நாட்டமுள்ள நந்தி:
நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது
நந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது
செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது
சிந்தையில் நினைப்பவர்க்குச் செல்வம்தரும் நந்தியிது    (நந்தி)

தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது
வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது
பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது
பார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது
சங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிது
எங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது    (நந்தி)

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது
நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது
நெய்யிலே குளித்து வரும் நேர்மையுள்ள நந்தியிது
ஈஎறும்பு அணுகாமல் இறைவன் வரும் நந்தியிது    (நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது
காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது
உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது
நகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது!!

நந்தி வாகனா:
நந்தி வாகன நாகபூஷண
நடன ஈஸ்வரா தில்லை நாயகா
சிவபெருமானே சிவகாமிநாதனே
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா

பசுபதி நாதா பார்வதிப் ப்ரியா
பரமதையாளா பரமேஸ்வர தேவா
விரிஞ்சி நாதனே ப்ரபஞ்சருபனே
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா    (நந்தி)

சகல நாயகா சந்திரசூடனே
புகழிடந்தந்தே கருணை காட்டுவாய்
கருணை ரூபனே கந்தன் தந்தையே
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா

திருமறை நாதா திருவருள் தருவாய்
திருச்சபை வாசா தீமை போக்குவாய்
மகாதேவனே மங்களம் தருவாய்
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா

கோமதி ப்ரியா கௌரி சங்கரா
பனிமலை வாசா பாபவிநாசா
கங்கா நாதனே வாம தேவனே
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா

ருத்ர நாயகா காயத்ரி வல்லபா
லோக ரட்சகா நீலகண்டனே
விஸ்வனே லிங்க மூர்த்தியே
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா

அம்பல வாசா ஆனந்த ருபா
பூத வாகனா புஸ்ப லோசனா
விஷ்னு மித்திரா இஷ்ட நாயகா
அம்பிகை ப்ரியா அனாத ரட்சகா!!

என் அப்பன் அல்லவா:
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன் அப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
ஆடிய பாதனே அம்பலவானனே
சிதம்பரத்தில் வாழும் சிவகாமி நேசனே!
ஆலால சுந்தரம் அற்புத சுந்தரம்
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்
காமாட்சி சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!!

பெற்ற தாயை:
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெற்றத்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சங் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
அந்த நமச்சிவாயத்தை நான் மறவேனே!



Post a Comment

Previous Post Next Post