திருவிளக்கு வழிபாடு || திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு || கணபதி வாழ்த்து || தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் || தேவி வாழ்த்து || திருவிளக்கு அகவல் || திருவிளக்குப் பாடல் || கலச பூஜை || அர்ச்சனை செய்யும் முறை || அர்ச்சனை 108 || நிவேத்யம் || போற்றுதல் முறை

திருவிளக்கு வழிபாடு:
1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு:
திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும், சுமங்கலிகளும் மாலைப் பொழுதில் திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலெட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும், தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலம் வறுமையும் நீங்கும். சக்தியும், வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி சூனியம் அணுகா.
ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும், அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும்,அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நன்மைகளும் பெறுவர்.

2. தேவையான பொருட்கள்:

திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப் பொருட்கள் (பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன ) திருநீறு, குங்குமம், சந்தனம், உதிர்பூ, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய், திரி, தீப்பெட்டி, ஒரு கப் (கலசம்) தீர்த்தம், அரிசி, மஞ்சள், ஊதுபத்தி முதலியன.

எல்லோரும் சொல்க:

ஓம் ஸர்வே பவந்து ஸுகின :
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்


பொருள்:

எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும். எல்லோரும் நோயில்லாமல் இருக்க வேண்டும். எல்லோரும் நன்மை பெறுக. யாரும் துன்புறாது இருக்கட்டும்.

3. கணபதி வாழ்த்து:
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோகவிநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்.


பொருள்:

யானை முகத்தவரை, பூதக் கூட்டங்களால் வணங்கப்படுபவரை, விளாங்கனியின் சாரத்தை உண்பவரை உமையின் மைந்தனை, சோகத்தினை அழிப்பவரை, விக்னேசுவரரைப் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

4. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல்:
(எழுந்தருளச் செய்தல்)

கோவிலிலிருந்து தீபம் கொண்டு வந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் போது

'ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி'


என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஊதுபத்தி கொளுத்தி வைக்கவும். பின் கீழ்வரும் பிராத்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.

‘ஆதி பராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக'.

5.தேவி வாழ்த்து:
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!


பொருள்:

எல்லா மங்களங்களையும் தந்தருள்பவளே, மங்கள மயமானவளே, அனைத்தையும் தருபவளே, சரண்புகத் தகுந்தவளே, முக்கண்ணாளே, கௌரி, நாராயணி உனக்கு நமஸ்காரம்.

ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்தி பூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே!


பொருள்:

படைப்பு, இருப்பு, அழித்தல் ஆகிய சக்திகளை உடையவளே, தொன்மையானவளே, நற்குணங்கள் உன்னையே வந்து சேருகின்றன. நற்குண மயமானவளே, நாராயணி, உனக்கு நமஸ்காரம்.

சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே!


பொருள்:

சரண்புகும் எளியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவளே, அனைவரின் துன்பத்தையும் அழிப்பாயாக. தேவி நாராயணி, உனக்கு நமஸ்காரம்.

6. திருவிளக்கு அகவல்:
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாஷித் தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்

ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்

மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால்பசுவைத் தாருமம்மா
ஸ் புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.


7. திருவிளக்குப் பாடல்:
(ரகுபதி ராகவ........... அல்லது நீலக்கடலின் ஓரத்தில் மெட்டு)

மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே

இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவே

இல்லம் தன்னில் விளக்கினையே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மை பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்

விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.


8. கலச பூஜை:
கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (மஞ்சட் பொடி கலந்த அரிசி) இட்டு உள்ளங்கையால் கலசத்தை முடிக் கொண்டு இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

'கங்கேச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு'


பொருள்:

என் முன் இருக்கும் நீரில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகள் எழுந்தருளட்டும்.

பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும் (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிதளவு நீர் விட்டுக் கையைச் சுத்தம் செய்ய வேண்டும்) அதன் பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஜ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீர் தெளிக்க வேண்டும்.

பின் கீழ்வருமாறு சொல்லுக:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவியடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே


9. அர்ச்சனை செய்யும் முறை:
ஆள்காட்டி விரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும், மலர்களையும் எடுத்து இடதுகை நெஞ்சோடு சேர்த்து வைத்து விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாகப் பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் அர்ச்சனைகளும் பின் கன்யாகுமார்யை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.

(ஒவ்வொரு மந்திரத்திலும் முதலில் ஓம் என்று சேர்த்துக் கொள்ளவும்)

அர்ச்சனை 108
1. ஓம் சிவாயை நம:

மங்கள வடிவினள்

2. ஓம் சிவசக்த்யை நம:

சிவனில் சக்தி

3. இச்சா சக்த்யை நம:

மன உறுதி என்னும் சக்தி

4. க்ரியா சக்த்யை நம:

செயல்படும் சக்தி

5. ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம:

பொன்னிறம் உடையவள் ஒளியும், அழகும் உடையவள்

6. ஜ்யோதி லக்ஷ்ம்யை நம:

ஒளியும் அழகும் உடையவள்

7. தீப லக்ஷ்ம்யை நம:

தீபத்தில் அழகாய் ஒளிர்பவள்

8. மஹா லக்ஷ்ம்யை நம:

பெரியவளாகிய திருமகள்

9. தன லக்ஷ்ம்யை நம:

செல்வத் திருமகள்

10. தான்ய லக்ஷ்ம்யை நம:

தானியங்களை உடைய திருமகள்

11. தைர்ய லக்ஷ்ம்யை நம:

அஞ்சாமையை உடைய திருமகள்

12. ஓம் வீர லக்ஷ்ம்யை நம:

வீரத்தை உடைய திருமகள்

13. விஜயலக்ஷ்ம்யை நம:

வெற்றித் திருமகள்

14. வித்யா லக்ஷ்ம்யை நம:

கல்வித் திருமகள்

15. ஜய லக்ஷ்ம்யை நம:

வெற்றியும் அழகும் உடையவள்

16. வர லக்ஷ்ம்யை நம:

வரம் தரும் திருமகள்

17. கஜ லக்ஷ்ம்யை நம:

யானையை அருகில் கொண்ட திருமகள்

18. காம வல்யை நம:

அன்புக் கொடி

19. காமாக்ஷிஸுந்தர்யை நம:

அன்பு மிகுந்த பார்வையை உடையவள் அழகியவள்

20. சுப லக்ஷ்ம்யை நம:

சுபத்தைத் தரும் திருமகள்

21. ராஜ லக்ஷ்ம்யை நம:

அரசாட்சி செய்யும் திருமகள்

22. க்ருஹ லக்ஷ்ம்யை நம:

இல்லத்திற்கு அழகாய் விளங்கும் திருமகள்

23. ஸித்த லமையை நம:

வேண்டியவை அனைத்தையும் பெற்ற திருமகள்

24. ஸீதா லக்ஷ்ம்யை நம:

சீதையாகிய திருமகள்

25. ஸர்வ மங்கள காரிண்யை நம:

நல்லன அனைத்தையும் செய்பவள்

26. ஸர்வ துக்க நிவாரிண்யை நம:

துக்கம் அனைத்தையும் போக்குபவள்

27. ஸர்வாங்க ஸுந்தர்யை நம:

உடல் முழுவதும் அழகு மிகுந்தவள்

28. ஸௌபாக்ய லக்ஷ்ம்யை நம:

நல்ல பாக்கியத்தை உடைய திருமகள்

29. ஆதி லக்ஷ்ம்யை நம:

பழமையான திருமகள்

30. ஸந்தான லக்ஷ்ம்யை நம:

குழந்தைகளைத் தரும் திருமகள்

31. ஆனந்த ஸ்வரூபிண்யை:

மகிழ்ச்சியே தன் வடிவ மாகப் பெற்றவள்

32. அகிலாண்ட நாயகியாயை நம:

படைப்பு முழுவதற்கும் தலைவியானவள்

33. பிரமாண்ட நாயகியாயை நம:

பெரிய படைப்பின் தலைவி

34. ஸுரப்யை நம:

நல்லனவற்றை சுரந்து தருபவள்

35. பரமாத்மிகாயை நம:

அனைத்தும் தானே ஆகிய பரம்பொருள்

36. பத்மாலயாயை நம:

தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்

37. பத்மாயை நம:

தாமரை வடிவாகியவள்

38. தன்யாயை நம:

நன்றி உள்ளவள், வேண்டியது அனைத்தும் உடையவள்

39. ஹிரண்மய்யை நம:

பொன் மயமானவள்

40. நித்யபுஷ்டாயை நம:

எப்போதும் நிறைந்து இருப்பவள்

41. தீப்தாயை நம:

ஒளிர்பவள்

42. வஸுதாயை நம:

உயிரைத் தருபவள்

43. வஸுதாரிண்யை நம

உயிரைத் தாங்கி நிற்பவள்

44. கமலாயை நம:

தாமரையில் இருப்பவள்

39. ஹிரண்மய்யை நம:

பொன் மயமானவள்

40. நித்யபுஷ்டாயை நம:

எப்போதும் நிறைந்து இருப்பவள்

41. தீப்தாயை நம:

ஒளிர்பவள்

42. வஸுதாயை நம:

உயிரைத் தருபவள்

43. வஸுதாரிண்யை நம:

உயிரைத் தாங்கி நிற்பவள்

44. கமலாயை நம:

தாமரையில் இருப்பவள்

45. காந்தாயை நம:

கவர்ச்சி மிக்கவள்

46. அனுக்ரஹப்ரதாயை நம:

அருள் தருபவள்

47. அனகாயை நம:

பாவம் அற்றவள்

48. ஹரிவல்லபாயை நம:

விஷ்ணுவின் மனைவி

49. அசோகாயை நம:

சோகம் அற்றவள்

50. அம்ருதாயை நம:

அமுத மயமானவள்

51. துர்க்காயை நம:

வெல்லுதற்கு அரியவள்

52. நாராயண்யை நம:

மனிதனுக்கு நல்வழி காட்டுபவள்

53. மங்கல்யாயை நம:

மங்கள மயமானவள்

54. கிருஷ்ணாயை நம:

கண்ணனின் வடிவாகியவள்
கவர்ந்து இழுப்பவள்

55. கன்யாகுமார்யை நம:

கன்னியாகவும் குமரியாகவும் இருப்பவள்

56. ப்ரஸன்னாயை நம:

மனமகிழ்ச்சி உடையவள்

57. கீர்த்யை நம:

புகழ் உடையவள்

58. ஓம் ஸ்ரீயை நம:

செல்வம் உடையவள்

59. மோஹ நாசின்யை நம:

குழப்பத்தைப் போக்குபவள்

60. அபம்ருத்யு நாசின்யை நம:

காலம் தவறிய சாவை நாசம் செய்பவள்

61. வ்யாதி நாசின்யை நம:

நோய்களைத் தீர்ப்பவள்

62. தாரித்ரிய நாசின்யை:

வறுமையைத் தீர்ப்பவள்

63. பயநாசின்யை நம:

அச்சத்தைப் போக்குபவள்

64. சரண்யாயை நம:

சரண்புகத் தகுந்தவள்

65. ஆரேக்யதாயை நம:

நோயற்ற நிலையை நல்குபவள்

66. ஸரஸ்வத்யை நம:

கலைமகள் வடிவினள்

67. மஹாமாயாயை நம:

பெரிய மாயை வடிவிலானவள்

68. புஸ்தக ஹஸ்தாயை நம:

புத்தகத்தைக் கையில் உடையவள்

69. ஜ்ஞான முத்ராயை நம:

ஞான முத்திரையை ஏற்றவள்

70. ராமாயை நம:

மனத்தை மகிழ்விப்பவள்

71. விமலாயை நம:

குறைகள் அற்றவள்

72. வைஷ்ணவ்யை நம:

விஷ்ணுவின் சக்தியானவள்

73. ஸாவித்ர்யை நம:

ஒளியை உடையவள்

74. வாக்தேவ்யை நம:

வாக்குக்குத்தேவதை

75. பாரத்யை நம:

கலைமகளானவள் / பாரதமாதாவானவள்

76. கோவிந்த ரூபிண்யை நம:

கோவிந்தனின் வடிவினள்

77. சுபத்ராயை நம:

நல்லவள்

78. த்ரிகுணாயை நம:

முக்குணங்களை உடையவள்

79. அம்பிகாயை நம:

தாயானவள்

80. நிரஞ்ஜனாயை நம:

மாசற்றவள்

81. நித்யாயை நம:

என்றும் உள்ளவள்

82. கோமத்யை நம:

கோமதி என்ற அம்பாள் வடிவினள் / நதி வடிவினள்

83. ஓம் மஹாபலாயை நம:

பெரும் பலம் உடையவள்

84. ஹம்ஸாஸனாயை நம:

அன்ன வாகனம் உடையவள்

85. வேதமாத்ரே நம:

வேதமாகிய தாய்

86. சாரதாயை நம:

குளிர்விப்பவள் / கலைமகள்

87. ஸ்ரீ மாத்ரே நம:

நல்ல அன்னை

88. சர்வாபரண பூஷிதாயைய நம:

அனைத்து அணிகளையும் பூண்டவள்

89. மஹாசக்த்யை நம:

பெரிய சக்தி

90. பவான்யை நம:

பவனாகிய சிவனின் மனைவி

91. பக்திப்ரியாயை நம:

பக்தியை விரும்புபவள்

92. சாம்பவ்யை நம:

நல்லோர்களால் வணங்கப்படுபவள்

93. நிர்மலாயை நம:

அழுக்கும் குறையும் அற்றவள்

94. சாந்தாயை நம:

அமைதி உடையவள்

95. நித்ய முக்தாயை நம:

எப்போதும் முக்தி வடிவில் இருப்பவள்

96. நிஷ்களங்காயை நம:

களங்கமற்றவள்

97. பாபநாசின்யை நம:

பாவத்தை நாசம் செய்பவள்

98. பேதநாசின்யை நம:

மன வேறுபாடுகளை நாசம் செய்பவள்

99. ஸுகப்ரதாயை நம:

சுகத்தைத் தருபவள்

100. ஸர்வேச்வர்யை நம:

அனைத்திற்கும் ஈஸ்வரி

101. ஸர்வமந்த்ர ஸ்வருபிண்யை நம:

எல்லா மந்திரங்களின் வடிவிலும் இருப்பவள்

102. மனோன்மன்யை நம:

மனத்துக்குள் ஒளிரும் மனம் உடையவள்

103. மஹேச்வர்யை நம:

பெரிய ஈஸ்வரி

104. கல்யாண்யை நம:

மங்கள வடிவிலானவள்

105. ராஜராஜேச்வர்யை நம:

ராஜாதி ராஜனுக்கும் ஈஸ்வரி

106. பாலாயை நம:

பாலா என்ற பெயரில் குமரி முனையில் விளங்குபவள்

107. ஓம் தர்மவர்த்தின்யை நம:

அறம் வளர்ப்பவள்

108. ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

மென்மையான தாய்

பின் பூக்கள் எடுத்து நெஞ்சுக்கு நேர் வைத்து:

ஓம் நாநாவித மந்த்ர பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி
என்று சொல்லி சமர்ப்பிக்கவும்.

பொருள்:

பலவிதமான மண மலர்களையும், இலைகளையும் மந்திரத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

10. போற்றுதல் முறை:
எல்லோரும் இருகரம் கூப்பி திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றெட்டு போற்றிகளை ஓத வேண்டும். கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலை பெற்றிருக்க வேண்டும்.

எல்லோரும் இருகரம் கூப்பி திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றெட்டு போற்றிகளை ஓத வேண்டும். கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலை பெற்றிருக்க வேண்டும்.

(ஒவ்வொரு மந்திரத்தின் முடிவில் 'போற்றி' என்று சேர்த்துக் கொள்ளவும்)

1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி

2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி

3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய்

4. மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி

5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி

6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி

7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி

8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி

9. பேரின்பப் பெருக்காய்ப் பொலிந்தாய் போற்றி

10. பேரருட் கடலாம் பொருளே போற்றி

11. முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி

12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி

13. அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி

14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி

15. ஓம் என்னும் பொருளாய் உள்ளாய் போற்றி

16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி

17. மங்கள நாயகி மாமணீ போற்றி

18. வளமை நல்கும் வல்லியே போற்றி

19. அறம் வளர் நாயகி அம்மையே போற்றி

20. மின்ஒளி அம்மையாம் விளக்கே போற்றி

21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி

22. தையல் நாயகித் தாயே போற்றி

23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி

24. முக்கட்சுடரின் முதல்வீ போற்றி

25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி

26. சூளாமணியே சுடரொளீ போற்றி

27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி

28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி

29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி

30. இல்லக விளக்காம் இறைவீ போற்றி

31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி

32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி

33. எரிசுடராய் நின்ற இறைவீ போற்றி

34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி

35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி

36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி

37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி

38. ஓதும் உள் ஒளி விளக்கே போற்றி

39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி

40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி

41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி

42. நல்லக நமசிவாய விளக்கே போற்றி

43. உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி

44. உணர்வு சூழ் கடந்ததோர் விளக்கே போற்றி

45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி

46. உள்ளத்தகழி விளக்கே போற்றி போற்றி

47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி

48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி

49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி

50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி

51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி

52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி

53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி

54. தில்லைப் பொதுநட விளக்கே போற்றி

55. கருணையே உருவாம் விளக்கே போற்றி

56. கற்பனை கடந்த ஜோதி போற்றி

57. அற்புதக் கோல விளக்கே போற்றி

58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி

59. சிற்பர வியோம் விளக்கே போற்றி

60. பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி

61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி

62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி

63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி

64. பெருகு அருள்சுரக்கும் பெருமா போற்றி

65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

66. அருவே உருவே அருவுரு போற்றி

67. நந்தா விளக்கே நாயகியே போற்றி

68. செந்தாமரைத்தாய் தந்தாய் போற்றி

69. தீபமங்கள ஜோதி போற்றி

70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி

71. பாகம் பிரியா பராபரை போற்றி

72. ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி

73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி

74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி

75. ஆழியான் காணா அடியோய் போற்றி

76. ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி

77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி

78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி

79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி

80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி

81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி

82. இருநில மக்கள் இறைவீ போற்றி

83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி

84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்போய் போற்றி

85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி

86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி

87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி

88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி

89. தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி

90. ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி

92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி

93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி

94. புகழ்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி

95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி

96. பூங்கழல் விளக்கே போற்றி

97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி

98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி

99. செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி

100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி

101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி

102. நலம் எல்லாம் உயிர்க்கு நல்குக போற்றி

103. தாயே நின்னருள் தருவாய் போற்றி

104. தூயநின் திருவடி தொழுதனம் போற்றி

105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி

106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி

107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி

108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

11.நிவேத்யம்:
நிவேத்யப் பொருள்களை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். எல்லோரும் சொல்க.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா


பொருள்:

அர்ப்பணம் செய்யும் செயல், பொருள், அக்னி, நடைமுறை அனைத்தும் பரம்பொருள் மயம் / அதனால் பரம்பொருளே அடையப்படுகிறது / செயலும் அதன் நிறைவும் பரம்பொருளே.

பின் கீழ்வரும் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறு தடவை நைவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா
ஓம் பிரம்மனே ஸ்வாஹா


பொருள்:

உடலில் ஐந்து விதமாக இயங்கும் பிராண சக்திகளை தேவிக்கு அர்ப்பணிக்கிறேன்.

தொடரும் திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 2




Post a Comment

Previous Post Next Post