திருவிளக்கு வழிபாடு || தீபலட்சுமியை வரவழைக்கும் திருவிளக்கு வழிபாடு || கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடத்தும் போது பாடப்படும் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் || கற்பூர நாயகியே கனகவல்லி || சங்கராய மங்களம்

திருவிளக்கு வழிபாடு || திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு || கணபதி வாழ்த்து || தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் || தேவி வாழ்த்து || திருவிளக்கு அகவல் || திருவிளக்குப் பாடல் || கலச பூஜை || அர்ச்சனை செய்யும் முறை || அர்ச்சனை 108 || நிவேத்யம் || போற்றுதல் முறை

பகுதி 1 திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 1

12. பாட்டு
கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மஹமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிகோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

(அம்மா கற்பூர.....)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியை நாட வேண்டும்

பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும்
பக்தியோடு கையுனையே கூட வேண்டும்
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மக்களுடைய குறைகளை நீ தீருமம்மா

(அம்மா கற்பூர ......)

நெற்றியினில் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் உன் திருநாமம் நிலவ வேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா

(அம்மா கற்பூர ......)


13. தீபாராதனை:
எல்லோரும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று தீபாராதனைக்கு தயாராகுக. திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். கற்பூரம் காட்டும்போது எல்லோரும் சேர்ந்து சொல்லுக

திங்களில் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ
கங்கிலா ஜோதிநீ கற்பூர ஜோதியே


பின் திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கற்பூர தீபத்தைத் தொட்டுக் கண்ணிலும், தலையிலும், நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் கற்பூர தீபத்தைக் தொட்டுக் கொள்ள நின்ற இடத்தில் நின்றவாறே கொடுக்க வேண்டும்

பின் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று வலம்வரத் தயாராக வேண்டும்.

14. திருவிளக்குகளை வலம் வருதல்:
எல்லோருமாக தேவிநாமம் கைதட்டிப் பாடிக் கொண்டு மூன்று முறை வலம் வருக.

நாமம்

ஜெய் ஜெய் தேவி
ஜெய் ஸ்ரீ தேவி


அதன்பின் அமர்ந்து எல்லோரும் சேர்ந்து சொல்லுக : மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஸ்வரி யத் பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்துதே!

தேவி, நாங்கள் செய்த பூஜையில் மந்திரம், நடைமுறை, பக்தி இவற்றில் குறைகள் இருந்தால் அவற்றை நிறைவு செய்வீர்களாக. பின் நமஸ்காரம் செய்து அமர்ந்து மங்களம் பாடி நிறைவு செய்க.
15. மங்களம்:
சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரீ மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் - தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம் - ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் - வேணு கிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம் - ராதாகிருஷ்ண மங்களம்
ராமகிருஷ்ண மங்களம் - சாரதைக்கும் மங்களம்
ஆனந்த மங்களம் - விவேகானந்த மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்

நாம கீர்த்தனம் பரந்து நானிலம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாம கீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்டாடுவோம்


16.பிரார்த்தனை:
கண்களை மூடி இருதயத் தாமரைமேல் அம்பிகை வீற்றிருப்பதை காணுக. அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையை கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்


எல்லோரும் சுகமாக வாழ்க!
எல்லோரும் நோயின்றி வாழ்க!
எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக!
ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய


பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்து வாயாக. அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஜோதிக்கு வழி நடத்துவாயாக. மரணத்திலிருந்து மரணமில்லாப் பெரு வாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக.

ஓம் பூர்ணமத : பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி


பொருள்: அங்கும் பூரணம், இங்கும் பூரணம், பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தபின் பூரணமே எஞ்சி உள்ளது. இரண்டு நிமிடம் தியானம் செய்க 'ஹரி ஓம் தத்ஸத்' எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.

பின் சுடர்விடும் தீபங்களை தீபங்களை மலரால் மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும். குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும், சர்வமங்களங்களும் உண்டாகும்.

(அர்ச்சனை செய்த மலர்களைக் காலால் மிதிக்காமல் நீர்நிலைகளிலோ சுத்தமான இடங்களிலோ போடவும். தீர்த்த ஜலத்தை கால்மிதிபடாத இடத்தில் கொட்டவும்.)




Post a Comment

Previous Post Next Post