சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள் || மனநலம் தரும் சுக்லாம்பரதரம் மந்திரம் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டியவை || Shuklambaradharam Vishnum Lyrics & Meaning | Benefits & Do’s & Don’ts When Chanting

சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள்:
சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸந்ந வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே


சுக்லாம் பரதர - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

விஷ்ணு - என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.

சசிவர்ண - நிலா போன்ற நிறம் உடையவர்.

சதுர்புஜ - நான்கு கை கொண்டவர்.

ப்ரஸந்த வதந - மலர்ந்த முகம் கொண்ட இறைவனை தியானிக்க வேண்டும் என்று உணர்த்துவது இந்த முதல் ஐந்து வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொன்றாக ஒரு குட்டாக ஐந்து முறை நெற்றியில் குட்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் மருத்து நலம் பெறலாம்.

சாந்தாகாரம் புஜகசயனம்
பத்மநாபன் சுரேஷம்
விஷ்வா தாரம் ககன சட்றுஷம்
மேக வர்ணம் சுபாங்கம்

லட்சுமி காந்தம் கமலநயனம்
யோகிபீர் தியான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம்
சர்வ லோகைக நாதம்

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும்
போஜனே ஜனார்தனம்
ஷயனே பத்மநாபம் ஷ
விவாஹே ப்ரஜாபதிம்

யுத்தே சக்ரதரம் தேவம்
ப்ரவாஸே த்ரிவிக்ரமம்
நாராயணம் தனு த்யாஹே
ஸ்ரீதரம் ப்ரிய சங்கமே

துஸ்வப்னே ஸ்மர கோவிந்தம்
ஸங்கடே மதுசூதனம்
கானனே நாரஸிம்ஹம் ஷ
பாவகே ஜலஷாயினம்

ஜலமத்யே வராஹம் ஷ
பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனம் சைவ சர்வ
கார்யேஷு மாதவம்

ஷோதசைடானி நாமாணி
ப்ரதுருத்தாய யஹ் படேத்
சர்வ பாப விநிர்முக்டோ
விஷ்ணு லோகை மஹியடி


மனநலம் தரும் சுக்லாம்பரதரம் மந்திரம் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டியவை:
எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். அதே போல எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன் ‘சுக்லாம்பரதரம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதால், நம் செயலுக்கு எல்லாமுமாக அந்த விநாயகரே இருப்பார் என்பது அதன் பொருளாகும்.

ஆன்மிகம் என்பது நமக்கு நல்வழி காண்பிப்பதோடு, ஒரு விதத்தில் நம் உடல், மன நலத்தை மேம்படுத்தும் வழிமுறையாகும்.

அந்த வகையில் விநாயகருக்குரிய எளிமையான அற்புத மந்திரம் எப்படி நம் மன நலனை மேம்படுத்தும் என்பதை பார்ப்போம்.

இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கள் பெறலாம்.

மந்திரம்:
சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். அதே போல எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன் ‘சுக்லாம்பரதரம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதால், நம் செயலுக்கு எல்லாமுமாக அந்த விநாயகரே இருப்பார் என்பது அதன் பொருளாகும். அந்த ஸ்லோகத்தை எப்படி சொல்வது என்பதைப் பார்ப்போம்.

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் ஆகியவற்றிற்கிடையே சுவாச நடப்பு நடக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சிரசில் குட்டிக் கொள்வதால் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்பு வழியாக நம் சுவாசத்தோடு பாயும் அதிசயம் நடக்கும்.






Post a Comment

Previous Post Next Post