செல்வங்களை அள்ள ஜோதிடம் கூறும் அருமையான வழிகள்:
செல்வத்தை பெற அல்லது ஈர்க்க செய்ய வேண்டிய வழிபாடுகள், சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை ஜோதிடம் விளக்குகின்றது. செல்வம் நம் வாழ்வில் பெருக ஜோதிடர்கள் கூறும் அருமையான வழிகள் இதோ..எல்லோருக்கும் செல்வந்தர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்றளவும் செல்வத்தை பெற என்ன வழி இருக்கிறது என்று தான் நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். ஏனெனில் பணத்தின் முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாதது.
அன்றாட வாழ்க்கையை வாழக் கூட ஒவ்வொருத்தருக்கும் பணம் தேவைப்படுகிறது. பணப்புழக்கம் இல்லாத காலங்களில் கூட பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்கிக் கொண்டு தான் வாழ்ந்து வந்தோம்.
அப்படிப்பட்ட செல்வங்களை எப்படி எளிதாக பெறலாம். உங்கள் வீட்டிற்க்கு லட்சுமி தேவியை அழைத்து எப்படி கொட்டோ கொட்டுனு செல்வங்களை அள்ளலாம், நிதிநிலையை வலுவாக்க செல்வந்தரான குபேரனை எப்படி மகிழ்விக்கலாம், செல்வத்தை எப்படி ஈர்க்கலாம் என்று ஜோதிடங்கள் உங்களுக்கு சில வழிகளை கூறுகிறது.
இதைப் பின்பற்றி வந்தால் உங்கள் வீட்டிலும் செல்வ செழிப்பு பெருகும், பணக் கஷ்டங்கள் நீங்கும் . மகா லட்சுமியின் அருளைப் பெற்று செல்வந்தராக வாழலாம். வீட்டில் நிம்மதி, சந்தோஷம், அன்பு, செல்வம் என்று எல்லா வளங்களும் நிறையும்.
மகாலட்சுமியின் வருகையின் மூலம் செல்வங்களை பெற வழிகள்:
செல்வத்தை பெற முதல் வழி நாம் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். ஏனெனில் அவளின் ஆசியும் அருளும் மட்டுமே அதை நமக்கு பெற்றுத் தரும்.மகாலட்சுமியை தினந்தேறும் வெள்ளிக்கிழமை நாளில் வழிபடுங்கள்
நெய் அல்லது நல்லெண்ணெய்யை ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மகாலட்சுமியின் புகைப்படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அர்ச்சித்து சூடம், பத்தி, சாம்பிராணி என ஆர்த்தி காட்டி வழிபட்டு வாருங்கள்.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளை வழங்கி வழிபடுங்கள்.
பூஜை வழிபாடு:
செல்வங்களை ஈர்க்க நிறைய யந்திரங்கள் உள்ளன. ஸ்ரீ யந்திரம், மகாலட்சுமி யந்திரம்,லட்சுமி குபேரர் யந்திரம். இந்த யந்திரங்களை செப்புத் தகடு, வெள்ளி பேப்பரால் ஆன ஒன்றை குபேரன் மற்றும் மகாலட்சுமி வசிக்கும் வீட்டின் வடக்கு பகுதியில் வைத்து வழிபட்டு வாருங்கள்.நவகிரகஸ் யந்திரம்:
இதன் மூலம் ஒன்பது கிரகங்களின் எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார நிலையை வலுமையாக்க முடியும்.மகாலட்சுமி யந்திரம்:
இந்த யந்திரத்தை வீட்டில் வைத்து வழிபடும் போது குடும்பத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செல்வாக்கு காக்கப்படுகிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை வலிமையாக்குகிறது.குபேர யந்திரம்:
குபேர யந்திரம் பணம் கொட்ட உதவுகிறது. இதை வழிபடும் போது பணம் வருவதற்கான தடைகள் நீங்கி செல்வ வரவை உயர்த்துகிறது.ஸ்ரீ யந்திரம்:
இந்த யந்திர வழிபாடு மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தந்து அதன் மூலம் குடும்பத்தில் செல்வாக்கு, அமைதி, கணவன் மனைவி அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றை வலிமையாக்குகிறது. நிதி நிலையை வலிமையாக்கி செல்வந்தராக ஆக உதவுகிறது.மந்திரங்கள்:
செல்வங்களை ஈர்க்க மற்றொரு சிறந்த வழி மந்திரங்களை ஓதுவது.லட்சுமி நாராயணன் மந்திரம்:
செல்வத்தின் அதிபதி மகாலட்சுமி தேவி அவர்கள். எனவே லட்சுமி தேவியையும் நாராயணனையும்
"ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய் நமக"
என்ற மந்திரங்கள் ஓதி வழிபட்டு வாருங்கள். செல்வமும் மகிழ்ச்சியும் கிட்டும்.
விஷ்ணு மந்திரம்:
இந்த உலகத்தையே ஆளும் சக்தி விஷ்ணு பகவான். அப்படிப்பட்ட அவரை
"ஓம் நமோ பகவதே வாசுதேவய நமக"
என்ற மந்திரத்தின் மூலம் வழிபட்டு வந்தால் செல்வ செழிப்பு பெருகும்.
லட்சுமி கணேஷ் மந்திரம்:
செல்வத்தின் அதிபதி லட்சுமி தேவியையும், ஞானத்தின் அதிபதி கணேசனையும் "ஓம் கம் ஸ்ரீம் சர்வா சித்தி பிரதய் ஷ்ரீம் கம் நமக" மூலம் வழிபட்டு வந்தால் செல்வமும், அறிவும் வளரும்.
லட்சுமி குபேர மந்திரம்:
தீராத கடனிலிருந்து விடுபட இந்த மந்திரம் பயன்படுகிறது.ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீம் குபேரயா, அஷ்டா-லட்சுமி மாமா கிரிஹே தனம் புராய புராய நமக
என்று ஓதி குபேரனையும் லட்சுமி தேவியையும் வழிபட்டு வாருங்கள்.
மகாலட்சுமி மந்திரம்:
செல்வ செழிப்பு, அதிர்ஷ்டம், வர வேண்டிய பணத்தை பெற, நிதிநிலையை வலிமையாக்க என பல்வேறு பலனை இதன் மூலம் அடையலாம்.
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலலேயே பிரசீத் , பிரசீத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமயே நமக"
ஓதுங்கள். மகாலட்சுமியை வழிபடுங்கள். நன்மைகள் கிட்டும்.
குபேர பகவானை மகிழ்விக்க, மகாலட்சுமி தேவியின் ஆசியை பெற:
வீட்டில் உள்ள பண லாக்கரை தெற்கு அல்லது தென் மேற்கு அலமாரியில் வையுங்கள். அதே மாதிரி வடக்கு திசையை பார்த்த வண்ணம் திறக்குமாறு இருக்க வேண்டும். பணலாக்கருக்கு முன்னால் ஒரு கண்ணாடியை பொருத்தி வையுங்கள். இப்படி வைக்கும் போது பண லாக்கரின் பிம்பம் கண்ணாடியில் விழும். இதன் மூலம் பணத்தை ஈர்க்க முடியும்.ஒரு போதும் இலவசமாக பொருளை வாங்காதீர்கள். உங்கள் உழைப்பையும் இலவசமாக கொடுக்காதீர்கள்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை நிறுத்துங்கள். அந்த பணம் தங்காது, சென்று விடும். எனவே நேர்மையாக சம்பாரித்து சேர்த்து வாருங்கள்.
வருகின்ற பணத்தில் சிறுதளவேனும் இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்து மகிழுங்கள். இதன் மூலம் மகாலட்சுமியின் உள்ளம் குளிர்ந்து மேலும் மேலும் உங்களுக்கு பண வரவு வரும்.
மகாலட்சுமியின் உருவமான உங்க வீட்டு பெண்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துங்கள். இது உங்களுக்கு மகாலட்சுமியின் அருளை தந்து பணத்தை பொழியும்.
குபேர யந்திரத்தை ஒரு சிகப்பு துணியின் மீது வைத்து உங்க வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வாருங்கள். இந்த யந்திரம் பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது.
வீட்டில் மகாலட்சுமியின் உருவமான துளசி மாடத்தை அமைத்து விளக்கில் நெய் ஊற்றி ஏற்றி வழிபட்டு வாருங்கள்.
வெண்மையான பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்குங்கள் செல்வ வளம் பெருகும்.
வீட்டில் உடைந்த பானைகள், பொருட்களை ஒரு போதும் வைத்திருக்காதீர்கள்.
தெற்கு நோக்கி வாயைத் திறந்த சங்கு, அவற்றில் நீர் நிரப்பி விஷ்ணு பகவானுக்கு அபிஷேகம் செய்து வாருங்கள். மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
தினந்தோறும் குளித்து முடித்த பிறகு லட்சுமி தேவியை வழிபட்டு நெற்றியில் குங்குமம் இட்டு வாருங்கள்.
வீட்டில் உள்ள பெண்கள் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதை தினமும் காலையில் வீட்டின் நுழைவாயிலில் ஊற்றி வாருங்கள். நேர்மறை சக்தி அதிகரித்து பண வரவு நுழையும்.
ஒவ்வொரு மாதமும் வெள்ளிக் கிழமை நாளில் 3 திருமணம் ஆகாத பெண்களுக்கு பாயாசம், மஞ்சள் ஆடைகளை தானமாக வழங்கி வாருங்கள். மகாலட்சுமி தேவி உங்களை ஆசிர்வதிப்பார்.
செல்வத்தை ஈர்க்க வழிகள்:
செல்வத்தை ஈர்க்க நீங்கள் பெரிதாக கஷ்டப்பட வேண்டாம். இதற்கு நம் கையில் கொஞ்சம் ஹகிக் கற்கள் இருந்தால் போதும். அதனுடன் சேர்ந்து உங்கள் கடவுள் வழிபாடும் முக்கியம். இந்த முறை மூலம் நமக்கு தேவையான செல்வங்களை ஈர்க்க முடியும்.செய்யும் முறை 1:
வெள்ளிக்கிழமை இரவு ஒரு 8 மணி அளவில் ஒரு மஞ்சள் துணியை விரித்து அதில் உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது கையில் மஞ்சள் ஹகிக் கற்களால் ஆன ஜெபமாலையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மகாலட்சுமி தேவியின் மந்திரத்தை 108 முறை ஓதி வாருங்கள். எளிதாக செல்வ வரவை ஈர்க்க முடியும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.செய்யும் முறை 2:
இதற்கு 11 கருப்பு ஹகிக் கற்களை சனிக்கிழமை நாளில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை குங்குமம் இட்ட நீரில் அலசி சுத்தம் செய்யுங்கள். அன்று இரவே அருகில் உள்ள காளி கோயிலுக்கு சென்று அவருடைய பாதத்தில் இந்த கற்களை வைத்து வழிபடுங்கள். 501 முறை காளி மந்திரத்தை கூறி பிறகு அந்த கற்களை ஒரு சிகப்பு துணியில் வைத்து கட்டி உங்கள் பர்ஸ்க்குள் வைத்துக் கொள்ளுங்கள். இனி உங்கள் பர்ஸில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.செய்யும் முறை 3:
நீங்கள் வேகமாக செல்வந்தராக விரும்பினால் இந்த முறையை பின்பற்றுங்கள். ஒரு மகாலட்சுமி தேவி சிலையை வாங்கி வெள்ளிக்கிழமை நாளில் அதற்கு மந்திரங்கள் ஓதி வழிபட்டு உயிரூட்ட வேண்டும். தினமும் வெள்ளிக்கிழமை குளித்து முடித்த பிறகு 27 ஹகிக் கற்களை சிலையின் முன் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டு வாருங்கள். நன்மைகள் கிட்டும்.
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a. Online Part Time Jobs from Home
b. Work from Home Jobs Without Investment
c. Freelance Jobs Online for Students
d. Mobile Based Online Jobs
e. Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a. Online Part Time Jobs from Home
b. Work from Home Jobs Without Investment
c. Freelance Jobs Online for Students
d. Mobile Based Online Jobs
e. Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob
Tags
ஆன்மீக தகவல்



